பிக்பாஸ் வரலாற்றிலேயே நடந்த மிகப்பெரிய சம்பவம்.! கவனித்தீர்களா.?! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3-யில் எலிமினேஷன் செய்யப்பட்ட இரண்டாவது நபர் வனிதா, இவர் எலிமினேஷன் செய்தது பலருக்கு உண்மையில் சந்தோஷத்தை தான் கொடுத்தது. அதற்கு காரணம் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக வனிதா இருந்தது தான்.

இந்நிலையில், வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி ஆகுமாறு ப்ரோமோ இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேளதாளம் முழங்க புடவை அணிந்துள்ள வனிதா நடனமாடியவாது உள்ளே செல்கிறார். வனிதாவின் எண்ட்ரீக்கு காரணம் என்ன என்பது பலருக்கும் மண்டையை குடையும் பிரச்சனையாக இருந்தாலும் பிக்பாஸ் உள்ளே அனுப்ப காரணமாக கூறப்படுவது என்ன தெரியுமா.?

vanitha, biggboss, seithipunal

சற்று பதட்டமாக காணப்பட்ட பிக்பாஸ் வீடு சில நாட்களாகவே சற்று ஸ்லோவாக போனது ரசிகர்களுக்கு சலிப்ப்பை ஏற்படுத்தியதால் எதிர்பாராத நேரத்தில் கஸ்தூரி வைல்ட் கார்டு எண்ட்ரீயாக உள்ளே நுழைந்தார். மீராமீதுன் போல நுழைந்தவுடன் ஏதாவது சண்டை ஏற்படும் என எதிர்பார்க்க கஸ்தூரி அந்தளவு சீனெல்லாம் இல்லை என கூறுவது போல அமைதியாகிவிட்டார். 

எதிர்பார்த்தது போல நடக்காததால் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி, அனைவரின் கவனத்தியும் ஈர்க்க தான் பிக்பாஸ் குழு வனிதாவை உள்ளே அனுப்ப முடிவு செய்துள்ளது. இவர் வீட்டில் விருந்தினராக சென்று உடனடியாக வெளியே வருவாரா.? அல்லது மீண்டும் பிக்பாஸ் வீட்டில் பயணிப்பாரா.? என்ற கேள்வி அனைவருக்கும் எழாமல் இல்லை. 

biggboss vanitha, seithipunal

இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன் ஒன்று மற்றும் இரண்டில் விருந்தினர்கள் வந்து தங்குவர். ஆனால், எலிமினேட் செய்யப்பட்ட ஒருவர் மீண்டும் வீட்டில் நுழைந்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் பிக்பாஸில் சுவாரஸ்யத்தை கூட்ட பிக்பாஸ் தனது கட்டுப்பாடுகளை தளர்த்தி வனிதாவை தூக்கி பிக்பாஸினுள் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biggboss house new misson


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal