'யசோதா' படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை.! - Seithipunal
Seithipunal


சமந்தா நடித்துள்ள 'யசோதா' படம் நவம்பர் 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று 10 நாட்களில் ரூ.33 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வாடகைத்தாய் மையத்தில் நடக்கும் மோசடிகளையும், அதை சமந்தா எப்படி கண்டுபிடித்து வெளி உலகுக்கு அம்பலப்படுத்துகிறார் என்பதும் கதை. மேலும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். 

இந்நிலையில் வாடகைத்தாய் மோசடி செய்யும் மருத்துவமனைக்கு படத்தில் ஒரு பெயர் வைத்துள்ளனர். ஆனால் நிஜமாகவே ஐதராபாத்தில் படத்தில் குறிப்பிட்டுள்ள பெயரில் ஒரு மருத்துவமனை உள்ளதால், அந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் யசோதா படத்துக்கு எதிராக ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மேலும் மனுவில் எங்கள் மருத்துவமனை பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யசோதா படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.டி.டி.யில் யசோதா படத்தை அடுத்த மாதம் (டிசம்பர்) 19-ந்தேதிவரை வெளியிட தடை விதித்து, பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ban on publication of yashoda film on otd site


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->