கலியுகத்துல பில்லி, சூனியமா?.. வீட்டில் நடந்தது என்ன?.. "அஷ்டகர்மா"வின் உண்மை.. திரை விமர்சனம்.!
ashtakarma movie review tamil
அறிமுக இயக்குனர் விஜய் தமிழ்செல்வன் - அறிமுக நடிகர் சி.எஸ். கிஷனின் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் அஷ்டகர்மா. நடிகை நந்தினி ராய், ஸ்ரீதா சிவதாஸ் உட்பட பலரும் அஷ்டகர்மா படத்தில் நடித்துள்ளனர். பல வருடங்கள் கழித்து பில்லி, சூனியம் தொடர்பான கதை வெளியாகியுள்ளதால், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அஷ்டகர்மா நாயகன் கிஷன் மனநல மருத்துவராக இருப்பதால், பேய் பிசாசு தொடர்பான நம்பிக்கை கிடையாது. இந்த விஷயம் குறித்து நடக்கும் டி.வி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டவரிடம் மந்திரவாதி, குறிப்பிட்ட வீட்டை கூறி உங்களால் தங்க முடியுமா? என்று கேட்க, நாயகனும் தயங்காமல் ஒப்புக்கொள்கிறார்.
அந்த வீட்டில் பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்த குடும்பம் நாயகனை தடுக்க, அதனை கேட்காமல் வீட்டிற்குள் செல்லும் நாயகனுக்கு என்ன நடக்கிறது?. பேய் - பிசாசு மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் மனநல மருத்துவர், வீட்டினுள் நடக்கும் அமானுஷ்யத்தால் உண்மையை உணர்கிறார். அமானுஷ்யத்தை கண்ணெதிரில் பார்த்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

அவரின் முயற்சி எப்படி நடக்கிறது? இறுதியில் பில்லி, சூனியம் வைத்தது முறியடிக்கப்பட்டதா? யாரால் அது வைக்கப்பட்டது என்பதை கதறியும் போது பார்வையாளர்களின் கண்முன் தெரிந்த பகீர் திகைப்பு என பரப்பரப்புடன் திரைப்படம் நகர்ந்து செல்கிறது. இறுதியில் டி.ஆரின் இசை வேற லெவலில் இருந்தது.
அறிமுக இயக்குனர், அறிமுக நடிகர் என இருந்தாலும், நல்ல கதையம்சம் கொண்ட படத்தை உருவாக்கி திறம்பட செயல்பட்டுள்ளனர் என்று தான் கூற வேண்டும். பில்லி, சூனிய ஏவல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை கண்முன் இயக்குனர் நிலைநிறுத்தியுள்ளார். அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆணித்தரமாக கூறி இருக்கிறார்கள். கட்டாயம் ஒவ்வொருவரும் தியேட்டரில் சென்று பார்க்கலாம்.
English Summary
ashtakarma movie review tamil