எஸ்.கே. 23 - போட்டவுடன் அப்டேட் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் 'அயலான்' திரைப்படத்தைத் தொடர்ந்து அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை 'ரங்கூன்' திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். 

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே. 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் மானிட்டர் முன்னால் ஏ.ஆர்.முருகதாஸ் அமர்ந்திருப்பதும், கேமராவின் முன்னால் சிவகார்த்திகேயன் அடர்த்தியான தாடியுடன் காணப்படுகிறார். மேலும், எஸ்.கே. 23 படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ar murugadass photo uplode sk 23 movie


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->