நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அஞ்சலி. இவர் தமிழ் சினிமாவில்  கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையானார். சமீபத்தில் இவருடைய உடல் எடை கூடி பட வாய்ப்புகளை இழந்த நிலையில் தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து திரைப்படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் தமிழில் சமர், நான் சிகப்பு மனிதன், மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திரு, 'ஜான்சி' என்ற புதிய வெப் சீரிஸை இயக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக நடிகை அஞ்சலி நடிக்க உள்ளார்.

சமீபகாலமாக திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவலும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய்.30கோடி இருக்கும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anjali assets value


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal