தமிழ்நாட்டில் 200 யூனிட் இலவச மின்சாரம்: 500 யூனிட்டை தாண்டினால் 200 யூனிட் இலவசம் கிடையாதா? புதிய சுற்றறிக்கை வெளியீடு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வீட்டு மின் நுகர்வோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டத்தை எந்த குளறுபடிகளும் இன்றி செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய சாப்ட்வேர் அப்டேட் மற்றும் கட்டண கணக்கீட்டு விதிமுறைகள் குறித்து களப் பணியாளர்களுக்கு மாவட்ட பொறியாளர்கள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கோப்பில் முதலாவதாக கையெழுத்திட்டிருந்தார். அதன்படி, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் மே 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் மின் கட்டணத்தில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்படும் என கூறப்படுகிறது. முன்பு 210 யூனிட் மின்சார பயன்பாட்டிற்கு ரூ.282 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.47 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல், 300 யூனிட்டிற்கு ரூ.705 பதிலாக ரூ.470, 400 யூனிட்டிற்கு ரூ.1175 பதிலாக ரூ.940, 500 யூனிட்டிற்கு ரூ.1805 பதிலாக ரூ.1570 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.

இந்த திட்டத்தை சீராக நடைமுறைப்படுத்தும் வகையில் மின்வாரியம் Billing Software-ல் தொழில்நுட்ப மாற்றங்களை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. புதிய மென்பொருள் மூலம் மின் கட்டணம் தானியங்கி முறையில் கணக்கிடப்படும். இந்த மாற்றங்கள் குறித்து களப்பணியாளர்களுக்கு முழுமையான பயிற்சி மற்றும் விளக்கங்களை வழங்க மாவட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின்படி, இரண்டு மாதங்களில் 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டுமே 200 யூனிட் இலவச சலுகை வழங்கப்படும். 500 யூனிட்டை தாண்டி மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு பழைய 100 யூனிட் இலவச மின்சார திட்டமே தொடரும்.

மேலும், இந்த புதிய விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும், தொழில்நுட்ப கோளாறுகள் இல்லாமல் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்றும் மின்வாரிய தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

200 units of free electricity in Tamil Nadu If you exceed 500 units wonot you get 200 units free New circular issued


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->