“திரிஷா எனக்கு மூத்த அக்கா மாதிரி” – மனம் திறந்த வரலட்சுமி சரத்குமார் - Seithipunal
Seithipunal


நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர். ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் தனது திறமையை நிரூபித்துள்ள அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நிக்கோலாய்க்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகும் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதோடு, கோலிவுட்டின் பிரபல ஜோடிகளில் ஒருவராகவும் பார்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை திரிஷாவுடனான தனது நட்பு குறித்து வரலட்சுமி மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:“திரிஷா எனக்கு மூத்த அக்கா மாதிரி. சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எங்களுக்கு பழக்கம் இருந்தது. நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது திரிஷாவுக்கு 16 வயது, எனக்கு 14 வயது. இந்த சினிமா உலகத்துக்கு முன்னாடியே நாங்கள் நல்ல நண்பர்கள்.”

மேலும் அவர் கூறுகையில்,“இப்போது நாங்கள் தினமும் சந்திக்கவோ பேசிக்கொள்ளவோ முடியாது. ஆனால் எதாவது முக்கியமான விஷயம் நடந்தால் உடனே ஒருவரை ஒருவர் தொடர்புகொள்வோம்” என்றார்.

வரலட்சுமியின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திரிஷா மற்றும் வரலட்சுமி இடையேயான நீண்டகால நட்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

வரலட்சுமி, ‘போடா போடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் ‘தாரை தப்பட்டை’, ‘சர்கார்’, ‘சண்டக்கோழி 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். படங்கள் பெரிய வெற்றி பெறாவிட்டாலும், தனது நடிப்பால் தனி கவனம் பெற்றார்.

தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trisha is like an elder sister to me Varalaxmi Sarathkumar opens up


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->