முதல் நாளில் இத்தனை கோடியா? சாதனைபடைத்த 'அனிமல்'!
Animal movie first day collection
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள 'அனிமல்' திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த திரைப்படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நேற்று வெளியாகிய நிலையில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் சன்னி தியோலின் சகோதரரான பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் முதல் நாளில் ரூ. 116 கோடி வசூலித்துள்ளதாக பட குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் இதுதான் இந்தி சினிமா வரலாற்றில் விழா காலங்கள் அல்லாத நாட்களில் வெளியாகி அதிக வசூல் குவித்த திரைப்படம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Animal movie first day collection