அதிர்ச்சி மரணம்.. அங்காடி தெரு பட நடிகை காலமானார்.! - Seithipunal
Seithipunal


மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அங்காடித் தெரு பட நடிகை சிந்து காலமானார்.

சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி படிப்படியாக உயர்ந்து வெள்ளிதிரையிலும் கால்தடம் பதித்தவர் நடிகை சிந்து. அதன்படி இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அங்காடித்தெரு என்ற திரைப்படத்தில் மாற்றுத்திறனாளிக்கு மனைவியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.  அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதில் புற்றுநோய் பரவல் காரணமாக ஒரு மார்பகம் முழுவதுமாக அகற்றப்பட்ட நிலையில், இரண்டாவது மார்பகத்திற்கும் புற்றுநோய் பரவி மிகுந்த வேதனை அனுபவித்து வருவதாக சமீபத்திய பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

மேலும், நடிகர்கள் யாராவது உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தார். தன்னுடைய உறவினர்கள் யாரும் உதவவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் நடிகை சிந்து சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2:15 மணி அளவில் காலமானார். தற்போத இவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Angadi theru movie Actress Sindhu passed away


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->