விஜய் டிவியில் உருவான புதிய ஜோடி துணிவு படத்தில் நடிக்கிறார்களா.? அஜித்துடன் எடுத்த படங்கள் வெளியானது.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார் நடிக்கும் துணிவு படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் கடைசியாக எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்த வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அடுத்ததாக இதே கூட்டணி தொடர்கிறது இந்த படத்திற்கு 'துணிவு' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு மற்றும் சண்டை காட்சிகள் மீதம் உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பட டைட்டில் 'துணிவு' என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஜோடியான அமீர்-பாவனி துணிவு படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பாங்காக்கில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து துணிவு திரைப்படத்தின் சக நடிகர்களுடன் நடிகர் அஜித் குமார் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amir bhavani couples photo with Actor Ajith Kumar in Thunivu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->