பாவாடை அணிந்து.. பொது நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகர்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் டேவிட் லீட்சின் இயக்கத்தில் உருவான திரைப்படம் புல்லட் டிரெயின். ஹாலிவுட்டில் மிகவும் அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது புல்லட் ட்ரெயின். இப்படத்தின் நாயகனாக பிராட் பிட் நாயகனாக நடித்துள்ளார். 

ஆரோன் டெய்லர், ஜான்சன் உட்பட பல திரையுலக நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியானது. 

இந்த நிலையில், இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு சென்று இருந்த பிராட் பிட், பழுப்பு நிறத்தில் தனது முட்டங்கால் தெரியும் அளவிலான குட்டை பாவாடையை அணிந்து வந்திருந்தார். 

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், "லண்டனில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வெப்பநிலை 40 டிகிரி உயர்ந்துள்ளது. இதனால் இந்த உடை மிகவும் காற்றோட்டமாக இருக்கிறது. ஆண்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும். நாம் அனைவரும் ஒருநாள் சாகப் போகிறோம், எதையாவது வித்தியாசமாக செய்வோம்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American Actor David Dress Code


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal