"ஆஸ்கார் விருதிலும் அரசியல் தான்" அப்பட்டமாக உண்மைகளை பிட்டு, பிட்டு வைத்த இயக்குனர் அமீர்.! - Seithipunal
Seithipunal


இந்த வருடம் நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் ஆஸ்கார் விருதை வென்றது. இந்தப் பாடலுக்கு இசையமைத்ததற்காக கீரவாணிக்கு  ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுக்காக பெரிய அளவில் பணம் செலவழிக்கப்பட்டதாகவும், இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றது. இத்தகைய நிலையில், பிரபல இயக்குனரும் நடிகருமான அமீர் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தியே பேட்டி ஒன்றில் அவர், "இந்திய திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி. கலைக்கு அரசியல் கிடையாது.

ஆஸ்கர் விருது ஒன்றும் பெரிய விருது என்று நான் எப்போதும் நினைத்தது இல்லை. அதை அந்த நாட்டின் தேசிய விருது என நினைக்கலாம். இந்திய திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தால் எனக்கு கிடைத்ததாக நான் நினைத்துக் கொள்வேன். நாட்டு நாட்டு பாடலுக்கான விருது வழங்கப்பட்டதில் அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஆஸ்கார் மட்டுமில்லை. அனைத்து விருதுகளிலும் இதுபோல அரசியல் இருக்கின்றது.

மாநில விருது, தேசிய விருது, தனியார் நிறுவன விருது அனைத்திலும் அரசியல் இருக்கிறது. சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் வெளிநாட்டுக்கு சென்றால் அவருடன் புகைப்படம் எடுக்க ஹாலிவுட் நடிகர்களே ஆசைப்படுவார்கள் .இந்தியாவிலேயே அவரை விட ஒரு சிறந்த நடிகர் கிடையாது. ஆனால் அவருக்கு ஏன் தேசிய விருது கொடுக்கப்படவில்லை தெரியுமா?

அப்படித்தான் அனைத்துமே. கடைசியாக தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு விருந்து வழங்கப்பட்டது. ஆனால், இது பற்றி பேசிய சிவாஜியே இந்த விருது கொடுக்கப்படவில்லை. வற்புறுத்தப்பட்டது என்று கூறி இருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை விருதுகளுக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆனால் தற்போது இல்லை." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ameer about oscar award to keeravani


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->