குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய யாஷிகா.! டெலிவரி பாய்க்கு நேர்ந்த சோகம்..!!
actress yashika anand car accident police investigation going on
தற்போது உள்ள திரையுலக நட்சத்திரங்கள் தங்களின் வருமானத்தை வைத்து ஆடம்பர கார் மற்றும் சொகுசு கார்களை வாங்கி குவித்து வருகின்றனர். இவர்கள் இரவு வேளையில் பப் மற்றும் கிளப்புகளுக்கு சென்று மது அருந்திவிட்டு., வீட்டுக்கு வருவது தற்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இந்த நிலையில்., வீட்டிற்கு வரும் சமயத்தில்., வாகனத்தை மதுபோதையில் இவர்களே இயக்குவதால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த்., அதிவேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளார்.
நடிகை யாசிகா ஆனந்த இரவு நேரத்தில் தனது சொகுசு வாகனத்தில் அதிவேகமாக வாகனம் நுங்கம்பாக்கம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது., அந்த பகுதியில் இருந்த டெலிவரி வாலிபரான பரத் என்ற வாலிபரின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பின்னர் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைகளில் மீது மோதி நின்ற நிலையில்., விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிருக்கு போராடியுள்ளார்.
இவரை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்., இந்த விபத்து குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சமயத்தில்., நடிகை யாஷிகா ஆனந்தின் கார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து யாஷிகா ஆனந்த தப்பி சென்றதாகவும் தெரிகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
actress yashika anand car accident police investigation going on