டெல்லியை காலையிலேயே அதிரவைத்த இயற்கை! மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் பலி!
Delhi heavy rain fall
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நஜாப்கரில் வீடு ஒன்று இடிந்து விழுந்து, மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் துவாரகா, கான்பூர் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் காரணமாக வாகன ஓட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து காலை 5 மணியளவில் நஜாப்கர் அருகேயுள்ள கர்காரி நஹார் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததாக தகவல் வந்தது. உடனடியாக விரைந்த மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கிய நான்கு பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆனால் மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்வு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.