நான் பாஜகவிலா? வனிதாவின் பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal


நடிகை வனிதா விஜயகுமார் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக சமூக ஊடகங்களில் பரவியது. அது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சியில் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். 

நடிகை கஸ்தூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "வனிதா மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்கன்ற கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சு!!!  ஒருமையில்லை, பன்மை! அடுத்து இணைவது காதலருடனில்லை, கட்சியிலாம்!" என தெரிவித்து இருந்தார். 

நடிகையாக இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமான வனிதா தொடர்ந்து அவரது திருமண வாழ்க்கை தொடர்பான சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். 

இந்த நிலையில் தான், அவர் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணையபோவதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவியது. இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சியில் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன். இப்போது அது குறித்து எதுவும் சொல்ல முடியாது என நடிகை வனிதா தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress vanitha give explanation about she will join BJP


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->