'ஆம்பளையா இருந்தா ஆதாரத்தோட வா' ஸ்ரீ ரெட்டியின் அடுத்த அதிரடி.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை டார்கெட் செய்து மோசமாக விமர்சனம் செய்து வருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டு கழட்டிவிட்டு சென்றனர் என்று இயக்குநர் ஏஆர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், லாரன்ஸ் மற்றும் விஷால் என்று பலரையும் சிக்கலில் இழுத்து விட்டவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. 

ஸ்ரீ ரெட்டி பல பிரபலங்களை குற்றச்சாட்டுக்கு ஆளாக்கியதன்காரணமாக திரையுலகமே கதிகலங்கி இருந்தது. சில நாட்களுக்கு முன்பு அரசியல்வாதியும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினை கூட அவதூறு பேசி விட்டு ஒரே நாளில் உதயநிதி என்றால் யார் என்றே தெரியாது என்று அந்தர் பல்டி அடித்தவர் ஸ்ரீரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், அடுத்தது ஸ்ரீரெட்டி வாயில் விழப்போவது யார் என்ற பயத்தில் இருந்த திரையுலகம் சமீபகாலமாக நிம்மதியாக இருக்கின்றது. அந்த நிம்மதிக்கு காரணம் சில நாட்களாக ஸ்ரீ ரெட்டி தன்னுடைய வாயை மூடிக்கொண்டு இருப்பதுதான். 

எப்பொழுதும் சர்ச்சை என்று இருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி, ஊரடங்கு நேரத்தில் கொஞ்சம் அடங்கி தான் இருக்கிறார். சர்ச்சையான விஷயங்களை விட்டு, விட்டு சமையல் வீடியோக்கள், டிக் டாக் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகின்றார்  அந்த வகையில், "ஆம்பளையா இருந்தா ஆதாரத்தோடு வா." என்ற மனோரமாவின் வசனத்தை டிக் டாக் செய்து இணையத்தில் வைரலாக்கி இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Sri reddy tiktok video 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->