பிரபல நடிகையின் தற்கொலை விவகாரம்.. நான்கு வருடத்திற்கு பின்னால் வெளியான பகீர் உண்மை.!! - Seithipunal
Seithipunal


சின்னத்திரைக்கு தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் பிரபல நடிகையாக மாறிய நிலையில், அவரது மர்ம மரணம் நிகழ்ந்தது. இந்த மரணம் தற்போது வரை மர்மமாக இருந்து வரும் நிலையில், மரணத்தின் மர்மம் குறித்து அவரது தோழி மனம் திறந்துள்ளார். 

இவர் சின்னத்திரை நாடகங்களில் வில்லியாகவும், சில திரைப்படங்களில் கதாநாயகிக்கு தோழியாகவும் நடித்திருந்தவர் ஆவார். தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த நடிகை சபர்ணா, சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியில் தங்கியிருந்தார். 

இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த 2016 ஆம் வருடத்தின் நவம்பர் மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் நிர்வாண நிலையில் அழுகி இருந்தது. இந்த விஷயம் திரையுலகினரிடைய பெரும் அதிர்வலையை பதிவு செய்தது. 

பின்னர் காவல் துறையினர் இவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பிரேத பரிசோதனை நிறைவு பெற்றதும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இதற்கான காரணம் இன்றுவரை தெரியவில்லை. 

இந்த நிலையில், சபர்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு 4 வருடங்கள் ஆகும் நிலையில், இவரது தோழியான உஷா எலிசபெத் அவருக்கு சரிவர படவாய்ப்புகள் கிடைக்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும், இவருக்கு அதிகளவு மனஉளைச்சல் இருந்ததாகவும், இதனை தன்னிடம் கூறவந்த நிலையில், தானும் ஆறுதல் தெரிவித்து வந்தேன். இருப்பினும் அவரால் இயல்பாக இருக்க முடியாத சூழ்நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இது மீண்டும் திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actress sabarna suicide case her friend speech about truth


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->