சன் டிவியை விட்டாச்சு.. அடுத்ததாக அந்த தொலைக்காட்சி சீரியலில் களமிறங்கும் ராதிகா.! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரையில் 80-களில் முக்கிய நடிகராக இருந்தவர் தான் நடிகை ராதிகா சரத்குமார். அதன் பின்னர், இவர் நிறைய குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்கள் பலவற்றிலும் இவர் நடித்து வருகின்றார். 

இவரது நடிப்பில் ஒளிபரப்பான சித்தி சீரியல் மிகவும் புகழ்பெற்றது. அத்துடன் வாணி, ராணி, அண்ணாமலை, செல்வி உள்ளிட்ட சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை ராதிகா சித்தி சீரியல் இரண்டாம் பாகத்தில் நடித்தார். அரசியலில் ஈடுபட்டதால் சிறிது நாட்கள் இந்த சீரியலுக்கு அவர் விலக்கு கொடுத்து இருந்தார். 

தற்போது அவர் மீண்டும் சின்னத்திரையில் நடிக்கவுள்ளார். இந்த முறை கலைஞர் தொலைக்காட்சியில் பொன்னி என்ற புதிய சீரியலில் நடிக்க இருக்கிறார். இதில் ஒரு கெஸ்ட் ரோலில் ராதிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress rathika in ponni serial


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->