வளர்ந்து வரும் நேரத்தில் தேவையற்ற செயல்.! ராஷிக்கண்ணாவுக்கு சீனியர்கள் அட்வைஸ்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ஓராண்டுக்கு முன்பு திரைக்கு வந்த படம் அடங்கமறு. இந்த படம் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

இந்த படத்தில் நடிகை ராஷிகண்ணாக்கு ஜோடியாக நடித்தவர் தெலுங்கு நடிகை ராஷிகண்ணா . இவர் அடுத்ததாக நடிகர் விஜய்சேதுபதியின் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்தில் நடிக்கிறார்.

நடிகை ராஷிக்கண்ணா தளபதி விஜயின் தளபதி 65 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க போவதாக கூறப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில், இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பது உறுதியானது. 

இந்த நிலையில், தெலுங்கு படங்களிலும், மலையாள படத்திலும் பிஸியாக நடித்து வருகின்றார். இந்தியில் 2 வெப் சீரிஸ்களில் மற்றும் 2 பாலிவுட் படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

இது போன்று தொடர் வாய்ப்புகள் குவிந்து வருவதால் நடிகை ராஷி கண்ணா சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பல நடிகைகள் இவ்வாறு திடீரென சம்பளத்தை உயர்த்தி தங்களது படவாய்ப்புகளை குறைத்து திரையில் இருந்து காணாமல் போய் விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress rashikanna salary may increased


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->