பிரபல 25 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் திரையுலகம்.!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தின் பிரபல தொலைக்காட்சி நடிகையாக இருந்து வருபவர் ப்ரீகேஷா மோத்தா (வயது 25). இவர் நேற்று இந்தூரில் இருக்கும் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் கிரைம் தொடர்களில் தோன்றி மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வந்த நிலையில், நேற்று இவரது அரை பூட்டப்பட்டு இருந்துள்ளது. 

பெற்றோர்கள் பலமுறையும் கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இதில் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டுள்ளார். இதனையடுத்து மகளை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 

இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், கொரோனா பாதிப்பிற்கு முன்னதாக மும்பையில் இருந்து தனது சொந்த ஊரான இந்தூருக்கு சென்ற நிலையில், வேலையின்மை காரணமாக பெரும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும், இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கனவுகளின் மரணம் என்பது மிகவும் மோசமான விஷயம் என்று கதையை குறிப்பிட்டு பதிவு செய்து இருக்கிறார். இதனால் மன உளைச்சல் காரணமாக நடிகை ப்ரீகேஷா மோத்தா உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தை அறிந்த ப்ரீகேஷா மோத்தாவின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Preksha Mehta Television commit suicide died in Indore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal