தேர்தலில் பாஜக வேட்பாளராக ஆலியா மானஸா மாமியார்.?! அவரே வெளியிட்ட தகவல்.!  - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு தேர்தல் நடக்க இருப்பதால் தமிழக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. சினிமா பிரபலங்கள் பலரும் அரசியல் கட்சியில் இணைந்து வருகின்றனர். பாஜக போன்ற தேசிய கட்சிகள் நடிகர், நடிகைகளை தங்களது கட்சிக்கு ஈர்க்க தீவிரமாக உழைத்து வருகின்றது. 

இந்நிலையில், நடிகை பிரவீணா பாஜகவில் சேர இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அத்துடன் அவர் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும் கூறப்பட்டது. தற்போது இந்த தகவலை அவர் மறுத்து இருக்கின்றார். 

மலையாள நடிகையான பிரவீனா பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றார். தீரன் அதிகாரம் ஒன்று, வெற்றிவேல், கோமாளி, சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார். தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து இருக்கின்றார். 

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் ஆலியா மானசாவுக்கு மாமியாராக நடித்து வருகின்றார். தற்போது, இவர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கொல்லம் அல்லது திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் அவர் போட்டியிட இருப்பதாகவும் கூறப்பட்டது. 

இதுகுறித்து அவர், "அரசியல் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. மேலும், அரசியல் கட்சியில் சேருகின்ற எண்ணமும் எனக்கு இல்லை. இப்படி ஒரு தகவல் மூலம் என்னை அரசியலுக்குள் இழுத்து விட்ட அந்த முகம் தெரியாத நபருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் அரசியலில் இல்லை." என்று விளக்கம் கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress praveena speech about bjp


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->