ஷூட்டிங்கில் விபத்திற்குள்ளான நடிகை.! பதறிப்போன ரசிகர்கள்... ஒரேயொரு ட்விட்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பேட்மிட்டன் வீராங்கனையான சாய்னா நோவாலின் வாழ்க்கையானது இந்தி மொழியில் திரைப்படமாக உருப்பெறுகிறது. இந்த திரைப்படத்தினை அமல் குப்தா இயக்கும் நிலையில்., இப்படத்திற்கான கதாநாயகியாக சாஹோ திரைப்படத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா கபூரை தேர்வு செய்துள்ளனர். 

இதற்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் போடப்பட்ட நிலையில்., திரைப்படத்தில் உண்மையான தத்ரூப காட்சிகளை பதிவு செய்வதற்காக பேட்மிட்டன் பயிற்சியை தற்போது மேற்கொண்டு வருகிறார். தற்போது படப்பிடிப்பானது தொடங்கியுள்ள நிலையில்., கால்சீட் பிரச்சனை காரணமாக படத்தில் விலகியுள்ளார். 

இவருக்கு பதிலாக சாய்னா நோவாலின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை பரினீதி சோப்ராவை தேர்வு செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த வாரத்தின் முதலாகவே படப்பிடிப்பானது துவங்கியது. 

Parineeti Chopra, Saina Nehwal,

இந்த சமயத்தில்., படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக கழுத்தில் காயமடைந்த பரினீதி சோப்ராவின் உடல்நிலை காரணமாக படப்பிடிப்பானது இரத்து செய்யப்பட்டது. மேலும்., இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விபத்தின் காரணமாக எனக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. 

இதற்காக தற்போது பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டு உள்ளேன். தற்போது எனது உடல்நலமானது நல்ல நிலைக்கு மீண்டும் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் தற்போது 15 நாட்கள் படப்பிடிப்பானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress Parineeti Chopra shooting accident


கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..Advertisement

கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..
Seithipunal