முட்டாள்....! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சித்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக உச்சத்தில் இருந்தவர் நடிகை மீனா. ரஜினி முதல் முரளி வரை பல பிரபல நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள மீனா, தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு , மலையாளம் இந்தி, கன்னடம் என பல இந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை மீனாவின் கணவடீ வித்யாசாகர் உடல்நலக் குறைவால் கடந்த 2022 ஆம் ஆண்டு காலமானார். இச்சம்பவத்திற்கு பிறகு மீனாவின் இரண்டாம் திருமணத்தைப் பற்றி பல வதந்திகள் பரவி வருகிறது. குறிப்பாக விசிக திருமாவளவன் கூட இந்த வதந்தியில் இடம் பெற்று இருந்தார்.

மேலும், திரைப் பிரபலம் பலரை குறிப்பிட்டு மீனா அவரை திருமணம் செய்துக் கொள்ள போகிறார் என்று வதந்தியாக பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

அண்மையில் கூட, திமுக எம்பி மகன் ஒருவர் அளித்த பேட்டியில், மத்திய இணை அமைச்சர் ஒருவருடன் நடிகை மீனாவுக்கு தொடர்பு இருப்பதாக வரம்பு மீறி பேசியது கடும் கண்டனத்துக்கு ஆளாகியது.

இந்த நிலையில், வதந்திகளை வெறுப்பாளர்கள் தான் உருவாக்குவார்கள், அதனை ஏமாளிகள் பகிர்வர் மற்றும் முட்டாள்கள் அதனை நம்புவர் என்று, நடிகை மீனா தனது எக்ஸ் பக்கத்தில் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress meena Tweet


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->