சர்வதேச திரைப்பட வழிகாட்டல் குழுவில் நடிகை குஷ்பு.!! - Seithipunal
Seithipunal


கோவாவில் நடைபெற உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட இயக்குனர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், திரைப்படங்களின் சிறப்பை வெளிப்படுத்தவும் ஒரு பொதுவான தளத்தை உருவாக்கும் நோக்கமாக கொண்டுள்ளது. 

மத்திய அரசு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ், திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் மற்றும் கோவை மாநில அரசு இணைந்து நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகிறது. திரைப்பட கலாச்சாரங்களை ஒன்றிணைத்து, பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நெறிமுறைகளை புரிந்து கொள்வதற்கும், உலக சினிமாவை பாராட்டுவதற்கும் விழா நடைபெறுகிறது. 

திரைப்பட கலையின் சிறப்பை வெளிப்படுத்த உலகா திரையரங்குக்கு ஒரு பொதுவான தளத்தை வழங்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மற்றும் உலக முழுவதிலும் இருந்து சில சிறந்த திரைப்படப்புகளை இந்த விழா கொண்டாடுகிறது. இந்த ஆண்டு 53வது சர்வதேச திரைப்பட விழாவில் நடத்துவதற்காக வழிகாட்டுதல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

அந்த குழுவில், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் தலைவராக உள்ளார். கோவை மாநில முதலமைச்சர் இணைத்தலைவர், ஒளிபரப்பு அமைச்சக செயலாளர், கோவை மாநில தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் அலுவலகம் சார் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகை குஷ்பூ, மனோஜ் முன்டாஷிர், விபுல் அம்ருத்லால் ஷா, பிரசூன் ஜோஷி, பிரியதர்ஷன், ஹ்ரிஷிதா பட், வாணி திரிபாதி ஆகியோர் உறுப்பினர்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actress khushpu on committee of the film festival


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->