#HBD ஹேமா மாலினி.. நடிகை, அரசியல்வாதி என பன்முக திறமைகொண்ட நடிகைக்கு இன்று பிறந்தநாள்
Actress Hema Malini Birthday Today
நடிகை ஹேமா மாலினிக்கு இன்று பிறந்தநாள்..
பிரபல நடிகையான ஹேமா மாலினி இந்திய நடிகை, நடனக் கலைஞர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என்று தன்னகத்தே பல திறமைகளை கொண்டவர். இவர் பெரும்பாலும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்றாலும், தமிழ், கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் மொழியில் இது சத்தியம் படத்தில் நடித்துள்ளார். ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஹேமா மாலினி, இன்றும் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தனது திரையுலக வாழ்க்கையில் பல்வேறு திரைப்பட விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள திருச்சி ஸ்ரீரங்கம் ஜெய லட்சுமி - வி.எஸ்.ஆர் சக்கரவர்த்தி ஐயங்கார் தம்பதிக்கு மகளாக கடந்த 1948 ஆம் வருடம் அக். 16 ஆம் தேதியான இன்று பிறந்தார். இன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. ஹேமா மாலினி லோக் சபா எம்.பி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Actress Hema Malini Birthday Today