நடிகர் விஜய் சேதுபதி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.! துணை நடிகர் வழக்கில் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதி மற்றும் துணை நடிகர் மகா காந்தி இருவரும் கடந்த 2021 நவம்பர் இரண்டாம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 

இது குறித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகா காந்தி விஜய் சேதுபதி மீது புகார் கொடுத்தார். இதன் விசாரணையில் விஜய் சேதுபதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் சம்மன் அனுப்பினர். 

இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி கோரிக்கை வைத்தார். இது குறித்த விசாரணையில் உயர் நீதிமன்றம் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கலாம் என்றும், அதை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் கடந்த ஜூலை 29-ல் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. 

இது குறித்த வழக்கு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி மேல் முறையீடு தாக்கல் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay sethupathy appeal supreme court


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal