நடிகர் விஜய் ஆண்டனியின் 'ஹிட்லர்'! வெளியான மோஷன் போஸ்டர்! - Seithipunal
Seithipunal


தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஹிட்லர்' இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். 

மேலும் சரண்ராஜ், கௌதம் மேனன், விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் தயாரித்துள்ளனர். 

நவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தற்போது படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமாக உள்ள இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay Antony Hitler released motion poster


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?




Seithipunal
--> -->