நடிகர் வடிவேலுவின் மகன், மருமகளை பார்த்துள்ளீர்களா?? வைரலாகும் புகைப்படம்!! - Seithipunal
Seithipunal



தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத காமெடி ஜோடி என்றல் அது கவுண்டமணி - செந்தில் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இவர்கள் ராஜியம் நடத்திக்கொண்டு இருந்த காலத்தில் "என் ராசாவின் மனசிலே" படத்தில் ராஜ்கிரண் மூலம் அறிமுகம் ஆனவர் தான் "வைகைப்புயல்" வடிவேலு.
 
இவரின் யதார்த்தமான நடிப்பு திரையரங்குகளில் படம் பார்க்கும் ரசிகர்களை உற்சாகநிலைக்கு கொண்டு சென்றது. நகைச்சுவை என்பது இருவர் சேர்ந்து பேசி நடித்தால் மட்டுமே ரசிகர்களை சிரிக்க வைக்க முடியும் என்ற வரலாற்றை மாற்றி அமைத்தவர் தான் வைகைப்புயல் வடிவேலு. இவர் என்ட்ரி என்றாலே திரைஅரங்கம் சிரிப்பு அலையில் அதிரும்.

நடிகர் வடிவேலு சில காலமாக ஒருசில காரணங்களால் தமிழ் சினிமாவில் இருந்து விளக்கியுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த படங்களும் பெரியளவில் வெற்றிபெறவில்லை. சமீபத்தில் ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்த நேசமணி என்ற கதாபாத்திரம் இணையத்தில் வைரலானது. இந்த விஷயத்தை அவருடைய மருமகள் சொல்லி தான் அவருக்கு தெரிந்தது என்கிறார் நடிகர் வடிவேலு.

காமெடி நடிகர் வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனுக்கு 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. வடிவேலுவின் மருமகள் பெயர் புவனேஸ்வரி. மகனின் திருமணத்திற்கு ஒரு பைசா கூட வரதட்சணையாக வாங்காமல் அனைத்துச் செலவுகளையும் வடிவேலுவே பார்த்துக் கொண்டாராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor vadivelu son


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->