சினிமாவில் இருந்து விலகிய நடிகர் உதயநிதி ஸ்டாலின்.. சோகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, இன்று தமிழக அமைச்சராக பொறுப்பேற்றார். அதன்படி இன்று காலை 9:30 மணி அளவில், கிண்டி ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலினின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சரவையில் 35ஆவது அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யபசெய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 'வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. வாரிசு அரசியல் என விமர்சிப்பது எனக்கு புதிதல்ல. எனது செயல்களின் மூலம் விமர்சனங்களுக்கு பதில் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி, இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் தான் தனது கடைசி படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்தில் இருந்து விலகியுள்ளாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Udayanidhi Stalin retired from cinema


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->