இரண்டாவது தாய் மடியில் எனது உயிர் பிரிய வேண்டும் - நடிகர் சிவக்குமாரின் உருக்கமான பேச்சு! - Seithipunal
Seithipunal


திருப்பூர், பல்லடம் வனாலயத்தில் 100 திருக்குறளை எடுத்துக்கொண்டு அதற்கேற்றவாறு வாழ்க்கை அனுபவங்களை இணைத்து வள்ளுவர் வழியில் வாழ்க்கை நடத்தியவர்களின் வரலாற்றுடன் 'குறல் 100' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் திருக்குறளின் படி வாழ்ந்து வந்தவர்கள் குறித்து திரைப்பட நடிகர் சிவகுமார் பேசினார். 

அப்போது அவர் வேண்டுதல் வேண்டாமை என்ற குறலில் தொடங்கி நூறாவது கதையாக மலக்குழி இறங்கும் துப்புரவு தொழிலாளியின் கதையை தெரிவித்து பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்ற திருக்குறளை தெரிவித்து நிறைவு செய்தார். 

அவர் தெரிவித்த கதைகளில் எம்.ஜி.ஆர்., சத்யராஜ், சூர்யா மற்றும் சிவகுமாரின் தாய் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் வாழ்க்கை சம்பவங்களை திருக்குறள் உடன் ஒப்பிட்டு பேசினார். 

மனைவி பற்றி நடிகர் சிவகுமார் பேசியபோது தெரிவித்திருப்பதாவது, எனது மனைவி லட்சுமி மடியில் தான் எனது உயிர் பிரிய வேண்டும். 

என் தாய் இறப்புக்குப் பிறகு இரண்டாவது தாயாக என்னை பேணி காக்கும் எனது மனைவியின் மடியில் தான் என் உயிர் போக வேண்டும் என உள்ளம் உருகி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sivakumar says me die my second mother lap


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal