#திருக்கடையூர் : பீமரத சாந்தி திருமணம் செய்த காமெடி நடிகர் செந்தில்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் பகுதியில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வந்து யாகங்கள் செய்து சாமி தரிசனம் செய்து வருவார்கள். 

இந்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 70 வயதான நபர்கள் பீமரத சாந்தி திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று ஆன்மீகவாதிகளால் நம்பப்படுகிறது.

அந்த வகையில் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக ஒரு காலத்தில் இருந்த செந்தில் தனது குடும்பத்தினருடன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்தார். அதன் பின் பீமரத சாந்தி முதல் கால பூஜையில் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அவர் தனது மனைவியுடன் சேர்ந்து பீமரத சாந்தி திருமணத்தை செய்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Senthil Beemarata Santhi marriage 


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->