பிரதமர் மோடி பயோபிக்கில் நான் நடிக்கவில்லை - நடிகர் சத்யராஜ் திட்டவட்டம்!! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கவில்லை. மோடியின் பயோபிக் திரைப்படத்தை என் நண்பர் மணிவண்ணன் இயக்கி இருந்த்தால் தத்ரூபமாக இருந்திருக்கும் என நடிகர் சத்யராஜ் குறிவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் 2019ம் ஆண்டு மோடியின் வாழ்க்கையை படமாக்கினார் ஆனால் படம் வந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் வாழ்க்கையை பான் இந்தியா திரைப்படமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் நிறைவடைந்ததற்கு பின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை குறித்து சுவாரிசமான தகவல் வெளியாகி உள்ளது. மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் மோடியாக பிரபல நடிகரும் தந்தை பெரியாரின் கொள்கையை பின்பற்று பவரும் பாஜக எதிர்ப்பாளரும் ஆன நடிகர் சத்தியராஜ் மோடியாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி பெரும்பரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் சத்யராஜ் தீவீர பெரியார் தொண்டன். நடிகர் சத்யராஜ் அடிக்கடி விமர்ச்சிக்கும் நபர்களில் பிரதமர் மோடி முக்கியமானவர். இந்திலையில், வதந்திக்கு முற்றும் புள்ளி வைக்கும் விதமாக சத்யராஜ் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். நடிகர் சத்யராஜ் கூறியதாவது, நான் பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிக்கவில்லை. அப்படியே , நடித்தாலும் வெற்றிமாறன், பா.ரஞ்சித் ,மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் படத்தை இயக்க முன் வந்ததால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். மோடியின் பயோபிக் திரைப்படத்தை என் நண்பர் மணிவண்ணன் இயக்கி இருந்த்தால் தத்ரூபமாக இருந்திருக்கும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sathyaraj say no act modi biopic


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->