ரீ என்ட்ரி கொடுத்த சஞ்சீவ் - பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


ரீ என்ட்ரி கொடுத்த சஞ்சீவ் - பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

விஜய் தொலைக்காட்சியில் நடிகை ராதிகாவின் தயாரிப்பில் ’கிழக்கு வாசல்’ சீரியல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீரியலின் பூஜையில் நடிகர் சஞ்சீவ் இருந்தார். இவர் தான் இந்த சீரியலின் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. 

ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது. இதுதொடர்பாக அவர், `என்ன காரணம் என்பதை மீடியா முன்னாடி விளக்கமாக பேச விரும்பல. நடந்ததை மறந்துட்டு அடுத்ததா என்னன்னு பார்க்கணும். 

சீக்கிரமே அடுத்த புராஜெக்ட் இருக்கும்’ என்று தெரிவித்திருந்தார். சொன்னதைப் போலவே, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் `வானத்தைப் போல' தொடரில் வீரசிங்கம் என்கிற போலீஸ் கதாபாத்திரத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

விரைவிலேயே புதுத் தொடரிலும் இவர் நடிக்க வாய்ப்பிருக்கிறது என்று சீரியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ’வானத்தைப் போல’ தொடரில் என்ட்ரி கொடுத்ததற்காக சஞ்சீவ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,`உங்கள் அனைவரின் வாழ்த்துகளுடன் பேக் டு சன் டிவி! என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் என்ட்ரியாகும் புரோமோ வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இதே சன் டிவியில் இவரது ‘திருமதி செல்வம்’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor sanjeev again act in vanathai pola serial


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->