பார்க்கவே பரிதாபமான நிலையில் பொன்னம்பலம்.. வெளியான வீடியோ.!! - Seithipunal
Seithipunal


நடிகர் பொன்னம்பலம் கடந்த 1963 ஆம் வருடம் நவம்பர் 11 ஆம் தேதி பிறந்தார். இவர் தமிழ் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத வில்லன் நடிகராகவும், ஸ்டண்ட் நடிகராகவும் இருந்து வந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பு பெற்றது. 

மேலும், கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான நாட்டாமை, 1995 ஆம் ஆண்டு வெளியான முத்து, 1999 ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். இவர் வயது மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சில திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், தமிழ் படம் மற்றும் வேங்கை போன்ற படங்களிலும் நடித்திருந்தார். 

இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் அறிமுகமான நிலையில், தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தற்போது அவருக்கு உடல் நலக் குறைவால் மருத்துவரின் அனுமதி ஆகியுள்ள நிலையில், இவரது குடும்பத்திற்கு தேவையான மற்றும் இவரது குழந்தைகளின் படிப்புச் செலவை நடிகர் கமலஹாசன் ஏற்றதாக ஏற்றுக் கொண்டதாகக் கூட தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தற்போது பொன்னம்பலம் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Ponnambalam video


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal