வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த மேலும் ஒரு நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!
Actor mayi Sundar passed away
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகரான மாயி சுந்தர் (வயது 50). இவர் துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ள நரி கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

தற்போது இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் மாயி சுந்தரின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் இன்று நடைபெற உள்ளது.
English Summary
Actor mayi Sundar passed away