நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு - எப்போது தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியான "கனா காணும் காலங்கள்" என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். அதன்பின்னர், அவர் சரவணன் மீனாட்சி, தாயுமானவன் உள்ளிட்ட பிரபல தொடர்களிலும், சத்ரியன், நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற காமெடி படத்தில் நாயகனாக நடித்து பிரபல நடிகரானார். 

சமீபத்தில் இவர் நடிப்பில் 'டாடா' என்றத் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபீசிலும் வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை 'பியார் பிரேமா காதல்' திரைப்படத்தின் இயக்குனர் எலன் இயக்குகிறார். 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும், இந்தப் படத்தின் டைட்டில் இன்று (28.08.2023) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kavin new movie name released today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->