மீண்டும் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில் யஷ்.? உற்சாகமடைந்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கன்னட ரசிகர்கள் மற்றுமின்றி சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த படம் கே ஜி எஃப். இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதையடுத்து.கே ஜி எஃப் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

கொரோனா பெரும் தொற்று காரணமாக கே ஜி எஃப் 2-ஆம் பாகத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி கே.ஜி.எஃப்  இரண்டாம் பாகம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யாஷ் அதீரா, சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் ஜி எஃப் 2-ஆம் பாகம் வெளியானது. இதனை தொடர்ந்து பிரசாந்த் நீல்ஸ் தற்போது பிரபாஸின் சலார் படத்தை இயக்கி வருகிறார்.

 இந்த திரைப்படத்தில் கேஜிஎஃப் நடிகர் யஷ் ஒரு சிறப்பு தோற்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor hash in chalar movie


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->