சோகத்தில் திரையுலகம் - பிரபல தமிழ் நடிகர் கங்கா காலமானார்.!
actor ganga passed away
1983-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற "உயிருள்ள வரை உஷா" என்ற படத்தில் நடித்தவர் கங்கா. அதுமட்டுமல்லாமல், "கரையைத் தொடாத அலைகள்", விசுவின் இயக்கத்தில் வெளியான "மீண்டும் சாவித்திரி" உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
ஏராளமான படங்களில் துணை நடிகராக நடித்துள்ள இவர், தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் படங்கள் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இதுவரைக்கும் திருமணம் ஆகாத இவர் தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். நடிகர் கங்கா உயிரிழந்த செய்தியை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நடிகரின் இந்த திடீர் இழப்பு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பலரும் கங்காவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்குகள், அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.