வெளியானது ஓவியாவின் 'அந்த' படம்.! அடசீ.. கருமம்.. காரி உமிழ்ந்து தள்ளும் தமிழர்கள்.!!
90 ml movie trailer
சமீபத்தில் தமிழக இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை என்றால், அது ஓவியா தான். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். ஆனால், அந்த மொத்த நல்ல பெயரையும் தற்போது வெளியான 90 எம்எல் திரைப்படத்தின் ஒரே ஒரு ட்ரைலரில் கெடுத்து கொண்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் களவாணி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ஓவியாவிற்கு, அதன்பின் பல படங்கள் வெளிவந்தாலும் ஒரு சில படங்களே அவர் பெயர் சொல்லும்படி ஓடியது. ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், கவர்ச்சி புயலாக ஏகபோகத்திற்கு ஆடைகளை குறைத்து ரசிகர்களை கவர நினைத்தார்.
ஆனால், அதுவும் எடுபடாமல் போகவே, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் மனதையும் கொள்ளை கொண்டா.ர் அவரின் இயல்பான குணத்தால் கவரப்பட்ட தமிழர்கள் அவருக்கு சிலை வைக்கும் அளவிற்கு சென்றுள்ளனர்.
இதற்கிடையே, தமிழ் சினிமாவில் தற்போது உருவாகியுள்ள ஒரு மோசமான கலாச்சாரமான 'அடல்ட்' திரைப்படங்கள் அதிகம் வரத் தொடங்கி உள்ளது. குறிப்பாக சொல்லவேண்டும் ''திரிஷா இல்லனா நயன்தாரா'' அந்த திரைப்படத்திற்குப் பின் ''ஹரஹர மகாதேவகி'', ''இருட்டு அறையில் முரட்டு குத்து'' போன்ற திரைப்படங்கள் தமிழ் சமுதாயத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் அதிகப்படியான இரட்டை அர்த்தங்கள் என்றுகூடக் கூற முடியாத அளவிற்கு, நேரடி ஆபாச வசனங்கள் மூலம் திரைக்கதை ஆக்கப்பட்டு, அந்தப் திரைப்படங்கள் வெற்றியும் கண்டுள்ளது.
இதனை தொடர்ந்து அதுபோன்ற அடல்ட் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அப்படியாக வெளிவர உள்ள ஒரு திரைப்படம்தான் ''90 எம் எல்''. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரைலரில் நடிகை ஓவியா சிகரெட் புகைப்பது, மது அருந்துவது, குடித்துவிட்டு ஆட்டம் ஆடுவது மற்றும் அந்த மாதிரியான விஷயங்களை வெளிப்படையாகவே தோழிகளுடன் பகிர்ந்து கொள்வது என்று காட்சியமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டிரைலருக்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் ஓவியா ஆர்மி (ராணுவம்) என்று இருந்த ரசிகர்கள் கூட இன்று ஓவியாவை கழுவி கழுவி திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படியே சென்று கொண்டிருந்தால் தமிழ் திரைப்படங்கள் ஆபாசங்களுக்கு பஞ்சமில்லாமல் படத்தின் டைட்டிலும் போதே 18 வயதுக்கு மேற்பட்டவர் மட்டும் பார்க்கக் கூடியது என்று வரக்கூடும்.
மேலும், தமிழ் சமுதாயம் தமிழ்க் கலாச்சாரம் இதனை அனைத்தும் மறந்து ஆபாச சிந்தனையில் தள்ளப்பட்டு, வருங்கால சந்ததிகள் என்று சொல்லக்கூடிய இளைஞர்கள், பள்ளி மாணவர்களின் மனநிலை கெட்டுப் போகக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற ஆபாசமான காட்சிகள் இடம் பெற்றுள்ள, சர்ச்சைக்குரிய வசனங்கள் இருக்கும் திரைப்படங்களுக்கு, திரைப்படத்துறையினரைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.