வரலாறு காணாத உச்சத்தில், வாயைப்பிளக்க வைக்கும் தங்கம், வெள்ளி விலை!  - Seithipunal
Seithipunal


இந்திய வரலாற்றில் தங்கம், வெள்ளி விலையானது இன்று (பிப்ரவரி 19) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு ஆனது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகத் தங்கத்தின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்தது. இந்த நிலையில் சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 31,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.3965 ஆக உள்ளது. நேற்று ரூ.3,926ஆக இருந்த நிலையில் இன்று கிராமிற்கு 39 ரூபாய் உயர்ந்துள்ளது.

24 கேரட் தங்கத்தின் விலை, நேற்று ஒரு கிராம் ரூ.4,122 க்கு விற்பனையான நிலையில் இன்று 41 ரூபாய் உயர்ந்து ரூ.4,163க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்தவகையில் ஒரு சவரன் 24 கேரட் தங்கம், 32976 ரூபாயிலிருந்து இன்று 33,304ஆக உயர்ந்திருக்கிறது.

தங்கத்தைப் போன்று வெள்ளியின் விலையும் உச்சத்தை அடைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50.60 ரூபாயிலிருந்து 51.80 ரூபாயாக உயர்ந்துள்ளது. கிலோ வெள்ளியின் விலை 1200 உயர்ந்து 51800 ஆக நிறைவடைந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today gold rate in chennai


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்




கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்




Seithipunal