ஏத்தர், ஒலா-வுக்கு போட்டியாக களமிறங்கும் 'சிம்பில் ஒன்' - மணிக்கு 105 கிமீ வேகம்!
Simple Energy Electric Scooter Simple one
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் 'சிம்பில் எனர்ஜி நிறுவனம்' இந்தியாவில் தனது இருசக்கர வாகன உற்பத்தியை துவங்க உள்ளது.
ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு, இந்தியாவில் தீன் சிம்பில் எனர்ஜி நிறுவனம் 2 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் உற்பத்தி ஆலையை கட்டமைக்க துவங்கியுள்ளது. இது தவிர தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் மற்றொரு உற்பத்தி ஆலையை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த உற்பத்தி ஆலையை கட்டமைக்கவே ரூ.100 கோடிக்கும் அதிக தொகையை சிம்பில் எனர்ஜி நிறுவனம் முதலீடாக செலவழித்து உள்ளது.

இதுகுறித்து சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுகாஷ் ராஜ்குமார் தெரிவிக்கையில், "எங்களுடைய திட்டமிடலிருந்து நிறைவேற்றுதல், ப்ரோடோடைப்பில் இருந்து உற்பத்திக்கு, கனவுகளில் இருந்து நிஜத்திற்கு அதிகாரப்பூர்வமாக இப்போது வந்து இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
முதல் சிம்பில் விஷன் 1.0 ஆலையில் இருந்து 'சிம்பில் ஒன் பிரீமியம்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஜனவரி 19, 2023 துவங்கவுள்ளது.
இந்திய சந்தையில் ஏத்தர் 450X, ஒலா S1 சீரிஸ் மற்றும் இதர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சிம்பில் எனர்ஜி உருவாக்கிய முதல் தயாரிப்பு 'சிம்பில் ஒன்' கடும் போட்டியாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

'சிம்பில் ஒன்' குறித்து வெளியான தகவல் :
4.8 கிலோவாட் ஹவர் பேட்டரி
4,5 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார், 72 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை திறன்
மணிக்கு அதிகபட்சம் 105 கிமீ வேகம்,
முழு சார்ஜ் செய்தால் 236 கிமீ ரேன்ஜ்
English Summary
Simple Energy Electric Scooter Simple one