நகை வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி! தங்கம் 2-வது நாளாக உயர்வு...! - இன்றைய விலை நிலவரம் என்ன...?
Shock jewellers Gold rises 2nd day What price situation today
சென்னையில் தங்கம் மீண்டும் உயர்வுப் பாதையைத் தொடந்துள்ளது. இரண்டாவது நாளாக 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து, நகை வாங்குவோருக்கு சற்று அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.மார்ச் 26 ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.13,670-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், ஒரு பவுன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ.1,09,360 என்ற புதிய மட்டத்தை எட்டியுள்ளது. நேற்று மட்டும் பவுனுக்கு ரூ.2,800 வரை உயர்ந்திருந்த நிலையில், தொடர்ந்து இன்று கூட விலை ஏற்றம் பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக சர்வதேச காரணிகளால் தங்கம் விலை சரிவில் இருந்தது. குறிப்பாக மேற்காசிய பதற்றம், அமெரிக்காவின் வட்டி விகிதக் கொள்கை தொடர்பான அறிவிப்புகள் போன்றவை சந்தையை பாதித்திருந்தன.
ஆனால் தற்போது நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, தங்கம் மீண்டும் உயர்வு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.மற்றபுறம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் உயர்ந்தாலும், வெள்ளி நிலைத்த நிலையைத் தக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Shock jewellers Gold rises 2nd day What price situation today