லைசன்ஸ் தேவையில்லை…மாணவர்கள், பெண்களுக்கு ஏற்ற !ஸ்கூட்டர்கள்!குறைந்த விலையில் கிடைக்கும் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
Scooters suitable for students and women 5 electric scooters available at low prices
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் ஆர்டிஓ பதிவு (RTO Registration) தேவையில்லாத குறைந்த வேக (Low-Speed) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பொதுமக்கள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. 25 கிமீ/மணி அதிகபட்ச வேக வரம்புக்குள் இயங்கும் இந்த வாகனங்களுக்கு லைசன்ஸ் அவசியமில்லை என்பதால், மாணவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
குறைந்த விலை, எளிய பராமரிப்பு, பெட்ரோல் செலவு இல்லாமை, சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை ஆகியவை இந்த ஸ்கூட்டர்களின் முக்கிய அம்சங்களாகும். நகர்ப்புறங்களில் தினசரி குறுகிய தூர பயணங்களுக்கு இவை சிறந்த தேர்வாக பார்க்கப்படுகின்றன.
ஜாய் இ-பைக் குளோப்
ஜாய் இ-பைக் நிறுவனத்தின் ‘Globe’ மாடல் சுமார் ரூ.70,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. 1.44 kWh லித்தியம்-அயான் பேட்டரியுடன் வரும் இந்த ஸ்கூட்டர், ஒரே சார்ஜில் சுமார் 60 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் திறன் கொண்டது என நிறுவனம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் டிஸ்ப்ளே, ரிவர்ஸ் மோடு, LED விளக்குகள் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஆம்பியர் ரியோ லி
Ampere Rio Li மாடல் 1.3 kWh மற்றும் 1.44 kWh என இரண்டு பேட்டரி விருப்பங்களில் கிடைக்கிறது. 70 முதல் 80 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் வழங்கும் இந்த மாடல்களின் அதிகபட்ச வேகம் 25 கிமீ/மணி. விலை ரூ.59,000 முதல் தொடங்குகிறது.
Okaya Freedom, Evolet Derby
Okaya Freedom மற்றும் Evolet Derby போன்ற மாடல்கள் 70 முதல் 90 கிமீ வரை ரேஞ்ச் வழங்குகின்றன. கீலெஸ் லாக், LED லைட்ஸ், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் போன்ற வசதிகளுடன் இவை அறிமுகமாகியுள்ளன.
Okinawa Lite
Okinawa Lite மாடலும் 60 கிமீ வரை ரேஞ்ச் வழங்குகிறது. இலகுவான வடிவமைப்பு மற்றும் சுலபமான இயக்கத்தால் நகரப் பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது.
மொத்தத்தில், குறைந்த செலவில், எளிதான இயக்கத்துடன், லைசன்ஸ் மற்றும் பதிவு சிக்கல்களின்றி பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த லோ-ஸ்பீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரு சிறந்த மாற்றாக உருவெடுத்து வருகின்றன. நகரப் போக்குவரத்து நெரிசலை குறைப்பதிலும், எரிபொருள் செலவை தவிர்ப்பதிலும் இவை குறிப்பிடத்தக்க பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Scooters suitable for students and women 5 electric scooters available at low prices