ரெனால்ட் ட்ரைபர் 2025: எங்க வேணாலும் பேமிலியா 7 பேர் போகலாம்.. இந்தியாவின் மலிவான 7 சீட்டர் கார்! புதிய வடிவத்தில் அறிமுகம்
Renault Triber 2025 Family of 7 can go anywhere India cheapest 7 seater car Launched in a new form
ரெனால்ட் நிறுவனம் தனது பிரபல 7 இருக்கைகள் கொண்ட MPV மாடலான ட்ரைபரை 2025 ஃபேஸ்லிஃப்ட் பதிப்பாக புதுப்பித்துள்ளது. புதிய அம்சங்களுடன் வந்துள்ள இந்த ட்ரைபர் மாடல் தற்போது இந்தியா முழுவதும் டீலர்ஷிப்களுக்கு வந்தடைந்துள்ளது. ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ₹6.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மிகப் பட்ஜெட்டான 7 இருக்கைகள் கொண்ட காராக மாற்றியுள்ளது.
புதிய ட்ரைபர் நான்கு வெவ்வேறு டிரிம்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: ஆத்தென்டிக், எவல்யூஷன், டெக்னோ மற்றும் எமோஷன். இந்த ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு 2019ல் அறிமுகமானதிலிருந்து ட்ரைபரில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாகும்.
வெளிப்புற வடிவமைப்பில் புதிய ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், LED DRL-க்கள், புதுப்பிக்கப்பட்ட முன்பக்க பம்பர், கிரில் மற்றும் புதிய ரெனால்ட் லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில் LED டெயில் லைட்கள், டிஃபோகர், வாஷர் மற்றும் வைப்பர் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேல் வகைகளில் உதிரி சக்கரமும் உள்ளடக்கியுள்ளது.
உள்புற அமைப்பில், எமோஷன் வேரியண்ட் இரட்டை-தொனி ஸ்டைலான கேபினுடன், குளிரூட்டப்பட்ட மைய கன்சோல், LED கேபின் விளக்குகள், குரோம் ஃபினிஷ் ஹவாக் கைப்பிடிகள், மேல் மற்றும் கீழ் கையுறை பெட்டிகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், 7-இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் வயர்லெஸ் Android Auto, Apple CarPlay வசதி உள்ளது.
பாதுகாப்பு அம்சங்களில், அனைத்து டிரிம்களிலும் 6 ஏர்பேக்குகள், Electronic Stability Control, Traction Control, Hill Start Assist, Brake Assist, ABS + EBD, Tyre Pressure Monitoring System போன்றவை வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ஓட்டுநர் சோர்வைத் தடுக்கும் “Take a Break” எச்சரிக்கை வசதி கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினுடன் வரும் ட்ரைபர், சுமார் 19 கிமீ/லிட்டர் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Manual மற்றும் AMT வகைகளில் இது கிடைக்கும்.
ரெனால்ட் ட்ரைபர் 2025 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன், புதிய வடிவமைப்பிலும், பாதுகாப்பு முன்னுரிமையுடனும், குறைந்த விலையிலும் கிடைக்கும் ஒரே MPV என அறிமுகமாகியுள்ளது. பெரிய குடும்பங்கள் மற்றும் பட்ஜெட்டில் 7 இருக்கைகள் கொண்ட வாகனம் தேடுபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கலாம்.
English Summary
Renault Triber 2025 Family of 7 can go anywhere India cheapest 7 seater car Launched in a new form