நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி...! தங்கம் விலை மேலும் குறைந்தது...! இன்றைய நிலவரம் என்ன...? - Seithipunal
Seithipunal


தங்கம் விலை இந்த மாத தொடக்கத்திலிருந்து தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், கடந்த 11-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,000 என்ற அளவுக்கு குறைந்து விற்பனையானது.

இதனால் தங்கம் விலை மேலும் தளரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அந்த கணிப்புகளுக்கு மாறாக, தங்கம் மீண்டும் உயர்வுப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. குறிப்பாக நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து விலை ஏற்றத்தின் வேகத்தை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலையில் சற்று நிவாரணம் கிடைத்தது. கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,060-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று மேலும் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 சரிந்து, ஒரு சவரன் ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கிராமுக்கு ரூ.30 குறைந்ததால், ஒரு கிராம் தங்கம் ரூ.14,030-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று எந்த மாற்றமும் பதிவாகவில்லை.

ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pleasant surprise jewelers Gold prices fallen further What situation today


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->