பட்டா மாற்றம்: பட்டாவில் இறந்தவர்களின் பெயரை நீக்கி வாரிசுகளின் பெயரை சேர்க்கும் எளிய நடைமுறை – அரசு அறிவிப்பு!
Patta change Simple procedure to remove the names of deceased persons from the patta and add the names of heirs Government announcement
தமிழ்நாட்டில் நில உரிமை தொடர்பான ஆவணங்கள் தற்போது கணினிமயமாக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளம் மற்றும் இ-சேவை மையங்கள் மூலமாக பொதுமக்கள் பல்வேறு சேவைகளை எளிதாக பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும், பல சிட்டா மற்றும் பட்டா ஆவணங்களில், இறந்த நில உரிமையாளர்களின் பெயர்கள் நீக்கப்படாமல், அவர்களது வாரிசுகளின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.
இந்த சிக்கலைத் தீர்க்கும் வகையில், தற்போது அரசு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் இ-சேவை மையங்கள் அல்லது Citizen Portal வாயிலாக, இறந்த உரிமையாளரின் பெயரை நீக்கி, வாரிசுகளின் பெயரை பட்டாவில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. இரா. சுகுமார், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்கும் நபரின் தன்மையைப் பொறுத்து, தேவையான ஆவணங்கள் மாறுபடக்கூடும் எனவும், விண்ணப்பிக்கும்போது சரியான ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்:
-
இறப்பு சான்றிதழ் – நில உரிமையாளர் இறந்ததை உறுதி செய்ய.
-
வாரிசு சான்றிதழ் – அவருடைய வாரிசுகள் யாரென்பதை நிரூபிக்க.
-
மேற்கண்ட வாரிசுகளில் எவரேனும் இறந்திருந்தால், அவர்களது இறப்பு சான்றிதழும் வாரிசு சான்றிதழும்.
-
வில்லங்க சான்றிதழ் – பட்டா மாறுதல் கோரப்படும் நிலத்தில் வழக்கு தொடர்புகள் இல்லையென்று உறுதிப்படுத்த.
-
பதிவுசெய்யப்பட்ட உரிமை ஆவணங்கள் –
இந்த நடைமுறையை எளிமையாக மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறையின் ஊடாக இ-சேவை மையங்கள் அல்லது Citizen Portal-ஐ பயன்படுத்தலாம். இணையதளம்: https://eservices.tn.gov.in/
இந்த நடைமுறை, நில உரிமையாளர் இறந்த பின்னரும் வாரிசுகளுக்கு உரிமையை சட்டப்படி பெற்றுத் தரும் ஒரு நம்பகமான வழியாக கருதப்படுகிறது. குறிப்பாக, விற்பனை, வங்கி கடன், சட்ட விவகாரங்களில் இடையூறு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்க இது உதவும்.
நில உரிமையாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள், இந்த திட்டத்தை பயன்படுத்தி, தங்கள் நில உரிமைகளை பாதுகாப்பதோடு, சட்டப்படி உறுதி செய்துகொள்ளலாம்.
English Summary
Patta change Simple procedure to remove the names of deceased persons from the patta and add the names of heirs Government announcement