மாஸ் காட்டி மாருதி சுசுகி! உலகின் சக்திவாய்ந்தவாகனத் துறையில் 8வது இடம் பிடித்த மாருதி சுசுகி! - Seithipunal
Seithipunal


உலகளாவிய வாகனத் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனம் மாருதி சுசுகி புதிய வரலாற்றை எழுதியுள்ளது. சமீபத்திய மதிப்பீட்டில், மாருதி சுசுகி உலகின் 8வது மிக உயர்ந்த மதிப்புமிக்க வாகன உற்பத்தியாளர் நிறுவனமாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 57.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறது. இதன் மூலம், ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன், அமெரிக்காவின் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பல வருட பாரம்பரியம் கொண்ட நிறுவனங்களை பின்தள்ளியுள்ளது.

பட்ஜெட் விலையில் சிறிய கார்கள் வழங்குவதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றிருக்கும் மாருதி சுசுகி, உள்ளூர் சந்தையில் வலுவான முன்னணியைப் பெற்றுள்ளது.சிறிய கார்கள் எளிதில் விற்கப்படுவதால், நிறுவனத்திற்கு பெரிய ஆதரவு கிடைத்துள்ளது.

இந்த சாதனையில் இந்தியாவின் ஜிஎஸ்டி சீர்திருத்தமும் முக்கிய பங்காற்றியுள்ளது.ஜிஎஸ்டி நடைமுறைக்கு பிறகு சிறிய கார்களின் விலை குறைந்ததால் வாடிக்கையாளர்கள் அதிகமாக முன்பதிவு செய்யத் தொடங்கினர்.மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்திய ஆட்டோ பங்குகளில் முதலீடு செய்ய முனைந்தனர். இதனால் மாருதி சுசுகியின் பங்கு விலை உயர்ந்து, அதன் உலகளாவிய மதிப்பு அதிகரித்தது.

உலகளாவிய வாகன நிறுவனங்களின் தரவரிசை

டெஸ்லா – $1.4 டிரில்லியன் (முதல் இடம்)

டொயோட்டா – $314 பில்லியன் (இரண்டாம் இடம்)

BYD – $133 பில்லியன் (மூன்றாம் இடம்)

ஃபெராரி – நான்காம் இடம்

பிஎம்டபிள்யூ – ஐந்தாம் இடம்

மெர்சிடீஸ் பென்ஸ் – ஆறாம் இடம்

மாருதி சுசுகி – $57.6 பில்லியன் (எட்டாம் இடம்)

ஃபோர்டு $46.3 பில்லியன் மதிப்பிலும், ஜெனரல் மோட்டார்ஸ் $57.1 பில்லியன் மதிப்பிலும், ஃபோக்ஸ்வேகன் $55.7 பில்லியன் மதிப்பிலும் பின்தங்கியுள்ளது.

இந்த சாதனையின் மூலம் மாருதி சுசுகி, இந்தியாவின் தனித்துவமான வளர்ச்சியையும், உலகளாவிய வாகனத் துறையில் போட்டித்திறனையும் வெளிப்படுத்தியுள்ளது.

மிகுந்த விலையுயர்ந்த கார்களுக்கு இடையே, சிறிய மற்றும் நடுத்தர விலையில் வாகனங்களை வழங்கி, உலகின் முன்னணி நிறுவனங்களில் இடம்பிடித்திருப்பது இந்திய வாகனத் துறைக்கு பெருமையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maruti Suzuki shows mass Maruti Suzuki ranks 8th in the world most powerful vehicle segment


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->