குணமடைந்து வீடு திரும்பிய 51 பேர்...! கரூரில் மீதமுள்ளோர் தீவிர சிகிச்சையில்...!
51 people have recovered and returned home rest intensive care Karur
கடந்த 27ஆம் தேதி,கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. பிரசாரக் கூட்டம் பேரதிர்ச்சியில் முடிந்தது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததும், 110க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததும் தமிழகத்தையே உலுக்கியது.
மேலும்,உயிரிழந்தோரின் உடல்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் காயமடைந்த 110 பேரில், 51 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். அதுமட்டுமின்றி,மீதமுள்ள 59 பேரில் 51 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அனைவருக்கும் மேம்பட்ட சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்தோர் விரைவில் முழுமையாக குணமடைய தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட கலெக்டர் மருத்துவர் மற்றும் செவிலியர் குழுவுக்கு விசேஷமாக அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
51 people have recovered and returned home rest intensive care Karur