விஜயை கைது செய் - கரூர், திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.!!
poster paste against tvk leader vijay in karoor trichy
தவெக தலைவர் விஜய் தலைமையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூர் மற்றும் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மாணவர் சங்கம் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டி நகர் முழுவதும் பல இடங்களிலும் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சுவரொட்டியில், தவெக தலைவர் விஜய் கைகளை உயர தூக்கியுள்ள நிலையில், அவரது கைகளில் இருந்து ரத்தம் வடிவது போல சித்தரித்து, ‘தமிழக அரசே அப்பாவி உயிர்களை பலி வாங்கி தப்பித்து ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக் குற்றவாளியை கைது செய் - தமிழ்நாடு மாணவர் சங்கம்' என்று அச்சிடப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
poster paste against tvk leader vijay in karoor trichy