துயரக் குரல்! கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு ஆண்ட்ரியாவும், மாஸ்க் குழுவும் உருக்கமான அஞ்சலி...!
Andrea and Mask team pay heartfelt tribute those who lost their lives Karur stampede
கரூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டம் பேரதிர்ச்சியுடன் முடிந்தது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் நடைபெற்ற பிரசாரத்தின் போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தமிழகமெங்கும் துயர அலை பரப்பியுள்ளது.மேலும்,உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசியல் தலைவர்களும் திரைத்துறையினரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதில் மம்மூட்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு,மோகன்லால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர்கள் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் தங்கள் ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துள்ளனர்.இவர்களின் வரிசையில் நடிகை ஆண்ட்ரியாவும், மாஸ்க் திரைப்படக் குழுவினரும் இணைந்துள்ளனர்.
அறிக்கை:
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “கரூரில் நடந்த விபத்தில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தது பெருந்துயர் அளிக்கிறது. உறவுகளை இழந்து வாடும் அவர்களது உற்றார் உறவினர்களின் துயரத்தில் பங்கெடுத்து கொள்வதோடு, படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவில் முழுவதும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
Andrea and Mask team pay heartfelt tribute those who lost their lives Karur stampede